கேரளாவில் 488 பேருக்கு கொரோனா பாதிப்பு; முதல் மந்திரி அறிவிப்பு
கேரளாவில் 488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இன்று வரை 8 லட்சத்து 49 ஆயிரத்து 817 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,685 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடமும், தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
இந்நிலையில்கேரளாவில் நேற்று ஒரே நாளில் 488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, “கேரளாவில் ஒரே நாளில் 488 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 438 ஆக உயர்ந்து உள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 164 பேர் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள், 76 பேர் வெளி மாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்கள். எஞ்சியோர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் 143 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 3,422 பேர் சிகிச்சையில் உள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இன்று 2 பேர் உயிரிழந்தநிலையில், கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story