திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்: உண்டியல் வருமானம் ரூ.15¾ கோடி


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்: உண்டியல் வருமானம் ரூ.15¾ கோடி
x
தினத்தந்தி 12 July 2020 1:07 AM IST (Updated: 12 July 2020 1:07 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாதத்தில் 2 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.15 கோடியே 80 லட்சம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமலை, 

கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி முதல், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது. எனினும், கோவிலில் தினமும் வழக்கமாக அனைத்துப்பூஜைகளும் நடந்தன. ஜூன் மாதம் 5-வது கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது, 8-ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் கோவில்களை திறக்க பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன்படி 83 நாளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக ஜூன் மாதம் 8-ந்தேதி அனுமதிக்கப்பட்டனர். 8, 9-ந்தேதிகளில் திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 10-ந்தேதி திருப்பதி மற்றும் திருமலையில் வசிக்கும் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

11-ந்தேதி வெளியூர், வெளி மாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஏழுமலையான் கோவிலில் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதித்தது நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. ஒரு மாதத்தில் 2 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஒருமாத உண்டியல் வருமானமாக ரூ.15 கோடியே 80 லட்சம் கிடைத்தது. லட்சம் பக்தர்களுக்குமேல் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஏழுமலையான் கோவிலில் 8 ஆயிரத்து 115 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 2 ஆயிரத்து 760 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.60 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story