அமிதாப்பச்சனுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன, உடல் நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை


அமிதாப்பச்சனுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன, உடல் நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை
x
தினத்தந்தி 12 July 2020 8:15 AM IST (Updated: 12 July 2020 8:15 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் உடல் நிலை சீராக உள்ளதாக மும்பை நானாவதி மருத்துவமனை அறிவித்துள்ளது. .

மும்பை,

கொரோனா தொற்று காரணமாக அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை மும்பை நானாவதி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமிதாப்பச்சனுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. அவரது உடல் நிலை சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.  இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று  மராட்டிய  சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப்பச்சன் விரைவில் உடல் நலம் குணம் அடைய விருப்பம் தெரிவித்து பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story