பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடைபெறும்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி


பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடைபெறும்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
x
தினத்தந்தி 12 July 2020 8:48 AM IST (Updated: 12 July 2020 8:48 AM IST)
t-max-icont-min-icon

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியது. அதனை தொடர்ந்து பாராளுமன்றத்தின் இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. அதன்பிறகு பாராளுமன்ற கூட்டம் நடைபெறவில்லை.

வழக்கமாக  பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும். நடப்பாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடைபெறும் என்று  பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி தெரிவித்துள்ளார். மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான அனைத்து நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். 

Next Story