காஷ்மீரில் தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
ரஜோரி,
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளபொழுதும், பாகிஸ்தான் ராணுவம் கடந்த காலங்களில், இந்திய நிலைகள் மீது அத்துமீறி பலமுறை தாக்குதல்களை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி தந்தது. கடந்த 8ந்தேதி, பாகிஸ்தான் ராணுவம் இதேபோன்று நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்தியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
தொடர்ந்து கடந்த 10ந்தேதி ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷெரா பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மாலை 6.45 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம், சிறிய ரக துப்பாக்கிகளை கொண்டு சுட்டும் மற்றும் பீரங்கிகளை கொண்டு குண்டுகளை வீசியும் இந்திய பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் இன்றும் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷெரா பிரிவில் இன்று இரவு 7.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. அவர்கள் நடத்தும் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story