மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா: பா.ஜனதாவில் இணைந்தார்
மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தநிலையில், தன்னை பா.ஜனதாவில் இணைத்துக் கொண்டார்.
போபால்,
மத்தியபிரதேசத்தில் காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தாவினர். இதனால் அங்கு கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மார்ச் மாதம் பதவி விலகியது. அதையடுத்து சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா அரசு பதவி ஏற்றது.
இந்தநிலையில் மத்தியபிரதேசத்தில் காங்கிரசை சேர்ந்த குன்வார் பிரதியும்னா சிங் லோகி என்பவர் தனது எம்.எல்.ஏ. பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை சட்டசபை சபாநாயகர் ராமேஷ்வர் சர்மா ஏற்றுக்கொண்டார். முன்னதாக அவர் மத்தியபிரதேச மாநில மூத்த பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசி இருந்தார். தற்போது அவரும் தன்னை பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துக் கொண்டார்.
Related Tags :
Next Story