உடல் நலம் பாதிப்பு குறித்து நடிகை ஹேமமாலினி மறுப்பு
உடல் நலம் பாதிப்பு குறித்து வெளியான தகவலுக்கு நடிகை ஹேமமாலினி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்தி நடிகை ஹேமமாலினி(வயது71) தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக உள்ளார். இந்தநிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவலை நடிகை ஹேமமாலினி மறுத்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கிருஷ்ணரின் அருளால் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
இதேபோல நடிகை ஹேமமாலினி நலமாக இருப்பதாக அவரது மகள் ஈஷா தியோலும் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இதுகுறித்து அவர், “எனது தாய் ஆரோக்கியமாகவும், நலமாகவும் உள்ளார். அவரது உடல்நலம் குறித்து வெளியான தகவல் போலியானது. அதுபோன்ற வதந்திகளுக்கு யாரும் எதிர்வினையாற்ற வேண்டாம். எல்லோரின் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி” என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story