ஊரடங்கை மீறிய குஜராத் மந்திரியின் மகன் கைது
ஊரடங்கை மீறிய குஜராத் மந்திரியின் மகன் கைது செய்யப்பட்டார்.
சூரத்,
குஜராத் மாநில சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. ஊரடங்கை மீறி பிரகாஷ் கனானியின் நண்பர்கள் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது. அவர்களை சூரத் போலீஸ் நிலைய பெண் ஏட்டு சுனிதாயாதவ் என்பவர் தடுத்து நிறுத்தினார். இதனை அறிந்த மந்திரியின் மகன் பிரகாஷ் கனானி, தனது தந்தையின் காரில் சம்பவ இடத்திற்கு வந்து பெண் ஏட்டிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.
மேலும், நாங்கள் நினைத்தால் 365 நாட்களாக உன்னை ஒரே இடத்தில் நிற்க வைக்க முடியும் என்று மந்திரியின் மகன் பெண் போலீசிடம் எச்சரிக்கை செய்தார். இந்த வாக்குவாத ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ஊரடங்கை மீறியதாகவும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் மந்திரியின் மகன் மற்றும் அவரது 2 நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே பெண் போலீஸ் ஏட்டு உடல்நிலை சரியில்லை என்று கூறி விடுப்பு எடுத்து சென்று விட்டதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story