திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாக வழக்கு: 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு
திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொண்டதற்கு எதிரான வழக்கில் 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.
திருவனந்தபுரம்
நாட்டில் புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள ஐகோர்ட் 2011-ம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம்கோர்ட் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, யு.யு.லலித் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story