தேசிய செய்திகள்

கொரோனா மருந்து என மது கொடுத்து சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது + "||" + UP ashram horror: 'Godman' drugged kids with 'Covid medicine', sodomised them

கொரோனா மருந்து என மது கொடுத்து சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது

கொரோனா மருந்து என மது கொடுத்து சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது
கொரோனா மருந்து என மது கொடுத்து சிறுவர்களை ஆபாச படம் பார்க்கவைத்து பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
முசாபர்நகர்

உத்திரபிரதேச மாநிலம், முசாபர்நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுக்ரட்டல் ஆசிரமம்.  ஆசிரமத்தை  சுவாமி பக்தி பூஷண் கோவிந்த்,  மோகன் தாஸ் என்பவருடன் சேர்ந்து நடத்தி வந்தார். அவருடைய ஆசிரமத்தில் கல்வி பயில வந்த சிறுவர்கள், பல கொடுமைகளை அனுபவிப்பதாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் போனில் குழந்தைகள் நல வாரியத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை தொடர்ந்து கோடியா மத் ஆசிரமத்திற்கு சென்ற போலீசார் பாதிக்கப்பட்ட 10 சிறுவர்களை ஆசிரமத்திலிருந்து மீட்டனர். இவர்கள் திரிபுரா மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

அப்போது மீட்கப்பட்ட சிறுவர்களை பரிசோதனை செய்த போது, அவர்களில் 4பேர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது அம்பலமானது. அதைத் தொடர்ந்து, போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றம்சாட்டப்பட்ட சாமியார், சிறுவர்களுக்கு கொரோனா மருந்து என்ற பெயரில் வலுகட்டாயமாக மதுபானத்தை கொடுத்துள்ளார். 

அதன் பிறகு, அவர்கள் போதையில் இருக்கும் போது, ஆபாச படங்களை வற்புறுத்தி பார்க்கவைத்துள்ளார். பின்னர்,  அவர்களை கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொடுமைபடுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கூறுகையில், அவர் பேச்சைக் கேட்க மறுத்தால் கண்மூடித்தனமாக தாக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். சாமியார் மீது போக்சோ வழக்கின் கீழ் சுவாமி பக்தி பூஷண் கோவிந்த்,  மோகன் தாஸ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாமியார்  மீசாட்டில் இருந்து 65 கி.மீ தொலைவில் உள்ள சிசாலி கிராமத்தில் வசிப்பவர். அவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்தை அமைத்தார், ”என்று முசாபர்நகர் எஸ்.எஸ்.பி அபிஷேக் யாதவ் கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை: தேசிய குழந்தைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, தேசிய குழந்தைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கி உள்ளது.
2. மனைவியை ஏமாற்றி நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன் உள்பட 5 பேர் கைது
கேரளாவில் 24 வயது பெண்ணிற்கு அவரது கணவரே வலுக்கட்டாயமாக மதுக் கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.