ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ராகுல்காந்தி தான் - உமாபாரதி குற்றச்சாட்டு


ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ராகுல்காந்தி தான் -  உமாபாரதி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 July 2020 6:48 PM IST (Updated: 13 July 2020 6:48 PM IST)
t-max-icont-min-icon

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடிக்கு, ராகுல்காந்தி தான் காரணம் என பா.ஜ.க. மூத்த தலைவர் உமாபாரதி குற்றம்சாட்டி உள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி உருவாகி உள்ள நிலையில் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடிக்கு, ராகுல்காந்தி தான் காரணம் என பா.ஜ.க. மூத்த தலைவர் உமாபாரதி குற்றம்சாட்டி உள்ளார். சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்ற இளம் தலைவர்களை கட்சியில் வளரவிடாமல் ராகுல்காந்தி தடுத்து வருவதாகவும், தமக்கு போட்டியாக உருவெடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் ராகுல் காந்தி செயல்பட்டு வருவதாகவும் உமாபாரதி குற்றம்சாட்டி உள்ளார். இளம் தலைவர்கள் வளர்ந்து விட்டால் தாம் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் ராகுல்காந்தியிடம் மேலோங்கி உள்ளதாக உமாபாரதி சாடியுள்ளார்.


Next Story