இந்திய வரலாறை ஆராயும் படிப்பை படிக்க விருப்பம்; சி.பி.எஸ்.இ. தேர்வில் 100% மதிப்பெண் வாங்கிய மாணவி பேட்டி
இந்தியாவின் கடந்த கால வரலாறை ஆராயும் படிப்பை படிக்க விருப்பம் என சி.பி.எஸ்.இ. தேர்வில் 100% மதிப்பெண் வாங்கிய மாணவி பேட்டியில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதன்படி, வெளியான தேர்வு முடிவுகளில் 88.78 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இவற்றில் திருவனந்தபுரம், பெங்களூர் ஆகிய நகரங்கள் இந்தியாவிலேயே அதிகபட்ச தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. அங்கு 97 சதவீதத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மண்டலத்தில் 96.17% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதலிடத்தில் திருவனந்தபுரமும், இரண்டாவது இடத்தில் பெங்களூருவும், மூன்றாவது இடத்தில் சென்னை மண்டலமும் உள்ளது. மாணவிகள் 92.15 சதவீதம் பேரும், மாணவர்கள் 86.19 சதவீதம் பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சி.பி.எஸ்.இ. தேர்வில் திவ்யன்ஷி ஜெயின் என்ற மாணவி 100% மதிப்பெண் வாங்கியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் வருங்காலத்தில், இந்தியாவின் கடந்த கால வரலாறை ஆராய்ச்சி செய்யும் படிப்பை படிக்க விரும்புகிறேன். நம் நாட்டின் வரலாறை பற்றி படித்து அதிகம் தெரிந்து கொள்வேன் என்று கூறி உள்ளார்.
Related Tags :
Next Story