இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 500 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா அதிவேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் நோய்த்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 28 ஆயிரத்து 701 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருப்பதாகவும், மேலும் 500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 254 ஆகவும், பலி எண்ணிக்கை 23 ஆயிரத்து 174 ஆகவும் உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் கொரோனா 500 பேரின் உயிரை குடித்துள்ள நிலையில், இதில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 173 ஆகும். கர்நாடகாவில் 71, தமிழகத்தில் 68, டெல்லியில் 37, மேற்குவங்காளத்தில் 26, உத்தரபிரதேசத்தில் 21, ஆந்திராவில் 19, குஜராத்தில் 13, பீகாரில் 12, ஜம்மு காஷ்மீரில் 10, மத்தியபிரதேசத்தில் 9, தெலுங்கானா 8, ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்டில் தலா 7, அரியானா மற்றும் பஞ்சாபில் தலா 4, ஒடிசாவில் 3, கேரளா, கோவா மற்றும் சத்தீஸ்காரில் தலா 2, உத்தரகாண்ட் மற்றும் சண்டிகாரில் தலா ஒருவரும் கொரோனாவால் புதிதாக உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள் வருமாறு:-
மராட்டியம் (7,827), தமிழ்நாடு (4,244), கர்நாடகா (2,647), ஆந்திரா (1,933), டெல்லி (1,573), மேற்குவங்காளம் (1,560), உத்தரபிரதேசம் (1,384), தெலுங்கானா (1,269), பீகார் (1,269), குஜராத் (879), அரியானா (658), ராஜஸ்தான் (644), ஒடிசா (595), அசாம் (535), கேரளா (435), மத்தியபிரதேசம் (431), ஜம்மு காஷ்மீர் (357), பஞ்சாப் (234), சத்தீஸ்கார் (162), ஜார்கண்ட் (143), உத்தரகாண்ட் (120), திரிபுரா (105), மேகாலயா (99), கோவா (85), புதுச்சேரி (81), இமாசலபிரதேசம் (31), நாகாலாந்து (26), அருணாசலபிரதேசம் (18), மணிப்பூர் (16), லடாக் (9), தாதர்நகர் ஹவேலி (8), சண்டிகார் (4), மிசோரம் (4), சிக்கிம் (2 ).
ஒட்டு மொத்தமாக நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8¾ லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், அதில் 5½ லட்சம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது. இன்னும் 3 லட்சத்து ஆயிரத்து 609 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முதல் 3 மாநிலங்களாக மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி இருந்து வருகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் டெல்லியில் பாதிப்பு 1 லட்சத்தை தாண்டிவிட்டது. முதல் இடத்தில் நீடிக்கும் மராட்டியத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2½ லட்சத்தை கடந்து இருக்கிறது. அதே நேரத்தில் கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த முதல் 3 மாநிலங்களாக மராட்டியம், டெல்லி, குஜராத் இருக்கிறது. இதில் மராட்டியத்தில் 10,289 பேரையும், டெல்லியில் 3,331 பேரையும், குஜராத்தில் 2,045 பேரையும் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.
Related Tags :
Next Story