தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள் + "||" + CBSE 12th Result 2020: Noida twins Mansi and Manya surprise all with perfectly identical scores

சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்

சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்
சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் நொய்டாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மான்சி மற்றும் மன்யா அனைவரையும் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
புதுடெல்லி

நொய்டாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மான்சி மற்றும் மன்யா ஆகியோர் மார்ச் 3, 2003 அன்று ஒன்பது நிமிடங்கள் இடைவெளியில் பிறந்தனர். இந்த இரட்டையர்களைப் பிரிக்கும் ஒரே விஷயம் இதுதான்.

இருவருக்கும் ஒரே மாதிரியான முகங்களும் குரல்களும், அமைந்துள்ளன.  இருவருக்கும் பூப்பந்து விருப்பமான விளையாட்டு . அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் கூட ஒத்தவை.

12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மதிப்பெண்கள் கூட திங்களன்று அறிவிக்கப்பட்டன  இதில் இரட்டை சகோதரிகள் ஒரேமாதிரியான மதிப்பெண்களை எடுத்து பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்கள் மிகவும் ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.

அறிவியல் பாடப்பிரிவு எடுத்துள்ள இருவரும் 95.8 சதவீத  மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர். இருவரும் 5பாடஙளிலும் ஒரே போல் மதிப்பெண் எடுத்து உள்ளனர்.

சகோதரிகள் ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியலில் 98 மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும், இயற்பியல், வேதியியல் மற்றும் உடற்கல்வி ஆகியவற்றில் தலா 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்றார்.

இதுகுறித்து மான்சி கூறியதாவது:-

ஐந்து பாடங்களிலும் எங்கள் மதிப்பெண்கள் ஒரே மாதிரியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மன்யா மிகவும் கடினமாக உழைத்தார், போர்டு தேர்வுகளில் என்னை விட அதிக மதிப்பெண் எதிர்பார்க்கிறார், ஆனால் எங்கள் மதிப்பெண்கள் ஒன்றுபோல் வந்து உள்ளன. நாங்கள் எப்போதும் ஒன்றாகப் படித்து ஒருவருக்கொருவர் சந்தேகங்களை போக்க உதவுகிறோம். எனது சகோதரி இயற்பியலில் வலுவானவள், அதே நேரத்தில் வேதியியலில் நான் நன்றாக படிப்பேன் என கூறினார்