ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுடன் முதல் மந்திரி அசோக் கெலாட் சந்திப்பு


ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுடன் முதல் மந்திரி அசோக் கெலாட் சந்திப்பு
x
தினத்தந்தி 14 July 2020 2:28 PM IST (Updated: 14 July 2020 2:28 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல் மந்திரி அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.

ஜெய்பூர்,

ராஜஸ்தானில்  முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடிய தூக்கிய துணை முதல் மந்திரி சச்சின் பைலட் பதவி பறிக்கப்பட்டது. அதேபோல், சச்சின் பைலட்டிற்கு ஆதரவு தெரிவித்த இரண்டு மந்திரிகளின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் சொகுசு விடுதியில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 102 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த  திருப்பங்களால் ராஜஸ்தான் மாநில அரசியலில், உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. இந்த சூழலில், ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல் மந்திரி அசோக் கெலாட் சந்தித்துப் பேசினார். தற்போதைய அரசியல் சூழல் பற்றி இந்த சந்திப்பின் போது பேசப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. 

Next Story