கொரோனாவால் பலியானோர் இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம்; ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு


கொரோனாவால் பலியானோர் இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம்; ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு
x
தினத்தந்தி 14 July 2020 8:57 PM IST (Updated: 14 July 2020 8:57 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தோரின் இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

அமராவதி,

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை 365 ஆக உள்ளது.  31,103 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதுவரை 16,464 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  14,274 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், இதுபற்றிய மறுஆய்வு கூட்டம் ஒன்று ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று நடந்தது.  அதன் முடிவில், கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தோரின் இறுதி சடங்குகளை மேற்கொள்வதற்கு ரூ.15 ஆயிரம் வழங்க முதல் மந்திரி முடிவு செய்துள்ளார்.

இந்த முடிவை உடனடியாக அமல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.  இந்த தகவலை ஆந்திர பிரதேச முதல் மந்திரியின் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Next Story