ராணுவத்தின் தயார்நிலை குறித்து எல்லையில் ராணுவ தளபதி ஆய்வு
ராணுவத்தின் தயார்நிலை குறித்து எல்லையில் ராணுவ தளபதி ஆய்வு மேற்கொண்டார்.
அமிர்தசரஸ்,
நாட்டின் மேற்கு எல்லையில் ராணுவத்தின் தயார்நிலை குறித்து ராணுவ தளபதி எம்.எம்.நரவனே நேற்று ஆய்வு செய்தார். அவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பெரோஸ்பூர் ஆகிய இடங்களில் உள்ள வஜ்ரா படைப்பிரிவு முகாம்களுக்கு சென்றார்.
அவருடன் மேற்கு பிராந்திய ராணுவ தளபதி ஆர்.பி.சிங்கும் சென்றார். படையினருடன் நரவனே உரையாடினார். அவர்களது மனஉறுதியையும், உத்வேகத்தையும் பாராட்டினார். சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பாராட்டு அட்டைகளை வழங்கினார். எந்த நேரத்திலும் தயார்நிலையில் இருக்குமாறு அனைத்து பிரிவினரையும் அவர் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story