தேசிய செய்திகள்

சச்சின் பைலட் பதவி- கட்சியில் இருந்து நீக்கம்: காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் வேதனை + "||" + Shashi Tharoor sad at Sachin Pilot's exit, calls him one of Congress' 'best, brightest'

சச்சின் பைலட் பதவி- கட்சியில் இருந்து நீக்கம்: காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் வேதனை

சச்சின் பைலட் பதவி- கட்சியில் இருந்து நீக்கம்: காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் வேதனை
சச்சின் பைலட் கட்சியில் சிறந்தவராகவும் மற்றும் பிரகாசமானவராகவும் இருந்தார் என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் வேதனை தெரிவித்து உள்ளார்.
திருவனந்தபுரம்

ராஜஸ்தான் மாநில துணை முதல்வரும், காங்கிரஸ் கமிட்டி தலைவருமான சச்சின் பைலட் பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, 

காங்கிரஸ் கட்சியின் எம்பி சசி தரூர்  அவரை கட்சியில் "சிறந்த மற்றும் பிரகாசமானவர்" என்று புகழ்ந்துள்ளார். மேலும், அவர் கட்சியை விட்டு வெளியேறுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் சசி தரூர் தனது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:-

சச்சின் பைலட் காங்கிரசில் இருந்து விலகுவதை கண்டு வருத்தமடைகிறேன். அவரை கட்சியில் சிறந்த நபர்களில் ஒருவராகவும், எதிர்காலமாகவும் நினைத்திருந்தேன், ஆனால் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. அவர் கட்சியிலிருந்து விலகுவதை விட, இணைந்து செயல்பட்டு கட்சியை மேலும் திறம்பட செயல்படுத்தி முன்னேற்றம் காணலாம், எங்கள் கனவுகளையும் நிறைவேற்றலாம்" என தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை வரவேற்க தயாராக இருக்கிறேன்; ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் பேட்டி
காங்கிரஸ் மேலிடம் மன்னித்தால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை வரவேற்க தான் தயாராக இருப்பதாக ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறி உள்ளார்.
2. மத்திய அரசை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் கைது
ராஜஸ்தான் அரசுக்கு நெருக்கடி எழுந்துள்ள நிலையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
3. காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்திற்கு மக்கள் விலை கொடுத்து வருகின்றனர்; வசுந்தராராஜே விமர்சனம்
காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்திற்கு மக்கள் விலை கொடுத்து வருகின்றனர் என்று பாஜக மூத்த தலைவர் வசுந்தராராஜே விமர்சனம் செய்துள்ளார்.
4. திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று
திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஒரு வருடத்திற்குள் தன்னை முதல்வராக அறிவிக்க வேண்டும்: பைலட் கோரிக்கை வைத்ததாக பிரியாங்கா காந்தி வட்டாரம் தகவல்
ஒரு வருடத்திற்குள் தன்னை முதல் மந்திரியாக அறிவிக்க வேண்டும் என சச்சின் பைலட் கோரிக்கை வைத்து இருந்தார் என பிரியாங்கா காந்தி நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.