சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவர்கள் தங்கள் முடிவுகளை ஆன்லைனில் cbseresults.nic.in இல் பெறுவார்கள்.
புதுடெல்லி
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில்
கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் நடைபெற்றன. சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்ற போதும் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கடந்த மாதம் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனால் மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கீடும் பணியில் சிபிஎஸ்இ ஈடுபட்டு வந்தது.
தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று (ஜூலை 15, 2020) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் cbseresult.nic.in இல் அறிவித்தது.
இந்த ஆண்டு மொத்தம் 18,73,015 பேர் தேர்வி எழுதி உள்ளனர். அதில் 17,13,121 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 91.46% ஆக உள்ளது.2019 ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் மொத்த தேர்ச்சி சதவீதம் 91.1% ஆக இருந்தது.
மாணவர்களை விட மாணவிகள் இந்த ஆண்டு 3.17% அதிக தேர்ச்சி சதவீதத்தை பதிவு செய்துள்ளனர்.
1.84 லட்சம் மாணவர்கள் 90% க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், 41,000 மாணவர்கள் 95% மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story