மலிவு விலையில் 4ஜி/5ஜி ஸ்மார்ட் போன்கள்: முகேஷ் அம்பானி அறிவிப்பு


மலிவு விலையில் 4ஜி/5ஜி ஸ்மார்ட் போன்கள்:  முகேஷ் அம்பானி அறிவிப்பு
x
தினத்தந்தி 15 July 2020 9:04 PM IST (Updated: 15 July 2020 9:04 PM IST)
t-max-icont-min-icon

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி/5ஜி போன்களை தயாரிக்க உள்ளோம் என்று முகேஷ் அம்பானி அறிவித்தார்.

மும்பை,

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது, இதில் பேசிய முகேஷ் அம்பானி 5ஜி சேவையை ஜியோ உருவாக்கி உள்ளது. 5ஜி அலைக்கற்றை கிடைத்தவுடன் அடுத்த ஆண்டு முதல் சில நகரங்களில் சேவை துவங்கப்படும்.

இதன் மூலமாக இந்தியாவில் உலகம் தரம் வாய்ந்த 5 ஜி சேவை கிடைக்கும் எனவும் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி/5ஜி போன்களை தயாரிக்க  உள்ளோம்"  என்றார்.

Next Story