கொரோனா தடுப்பு மருந்து : 2-வது இந்திய நிறுவனமும் மனிதர்களிடம் பரிசோதனையை தொடங்கியது


கொரோனா தடுப்பு மருந்து : 2-வது  இந்திய நிறுவனமும் மனிதர்களிடம் பரிசோதனையை தொடங்கியது
x
தினத்தந்தி 15 July 2020 3:47 PM GMT (Updated: 15 July 2020 3:47 PM GMT)

கொரோனா தடுப்பூசி: 2-வது இந்திய நிறுவனமும் மனிதர்களிடம் பரிசோதனையை தொடங்கியது

புதுடெல்லி,

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவும் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் கடிலா ஆகிய இரு நிறுவனங்கள் கண்டுபிடித்த தடுப்பூசி விலங்குகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இதையடுத்து, மனிதர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்த இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இந்திய ம்ருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் கொடுத்தது.

இதன்படி, பாரத் பயோடெக் நிறுவனம் தன்னார்வலர்களிடம் மனிதர்களிடம் மருத்துவ பரிசோதனையை  ஏற்கனவே தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஜைடஸ் கடிலா நிறுவனமும் மருத்துவ பரிசோதனையை தொடங்கியுள்ளது. 1,058 தன்னார்வலர்களிடம் இந்த பரிசோதனையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story