இந்திய, ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் ஜனநாயக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இந்திய, ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் ஜனநாயக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையேயான 15-வது உச்சி மாநாடு, கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த மாநாடு ஒத்தி போட்டப்பட்டது.
இந்த நிலையில், இந்திய-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு காணொலி காட்சி வழியாக நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஐரோப்பிய யூனியனுடனான உறவை மேம்படுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன். நாம் கொரோனா வைரஸ் தொற்றுநோயை சந்தித்து வருகிறோம். நாம் மிகப்பெரிய சவால்களை எதிர்நோக்கி உள்ளோம். இத்தகைய தருணங்களில், இந்தியா, ஐரோப்பிய யூனியன் கூட்டு என்பது மிக முக்கியம் ஆகிறது. நாம் இதில் மிகப்பெரிய பங்கு பணி ஆற்ற முடியும்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பிந்தைய சூழலில் ஜனநாயக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். உலகளவில் பொருளாதார ரீதியில் புதிய சவால்கள் காத்திருக்கின்றன. இதில் தீர்வு காண்பதற்கு ஜனநாயக நாடுகள் கட்டாயம் ஓரணியில் திரள வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இந்த உச்சி மாநாட்டில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story