கொரோனா பாதிப்பு: வேறு எந்த நாட்டையும் விட சிறப்பாக செயல்பட்டுள்ளோம்- மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்


கொரோனா பாதிப்பு: வேறு எந்த நாட்டையும் விட சிறப்பாக செயல்பட்டுள்ளோம்- மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
x
தினத்தந்தி 16 July 2020 12:22 PM IST (Updated: 16 July 2020 12:22 PM IST)
t-max-icont-min-icon

அதிக மக்கள் தொகை கொண்ட தேசமாக இருந்தபோதிலும், வேறு எந்த நாட்டையும் விட சிறப்பாக செயல்பட்டதாக கூறலாம் என மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ராஜ்குமாரி அமிர்த கவுர் கட்டிடத்தை மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் திறந்து வைத்தார். இந்த கட்டிடம் வயதானவர்களின்சேவைகள் மற்றும் பிசியோதெரபிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி சவுபேயும் கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இவ்வளவு அதிக மக்கள் தொகை கொண்ட தேசமாக இருந்தபோதிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நாம் மற்ற நாடுகளை விட நான் சிறப்பாக செயல்பட்டோம்.  இந்தியாவில் கொரோனாவால் இறப்பு விகிதம் 2.57% மற்றும் குணமடைந்தோர் விகிதம் 63.25% ஆக உள்ளது என கூறினார்.

Next Story