புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,743 ஆக உயர்வு


புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,743 ஆக உயர்வு
x
தினத்தந்தி 16 July 2020 3:59 PM IST (Updated: 16 July 2020 3:59 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,743 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 147 பேருக்கு இன்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,743 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோன்று இன்று 58 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 947 ஆக உள்ளது.  இதுவரை 774 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஒருவர் இன்று பலியான நிலையில், பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story