கேரளாவில் 10,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை


கேரளாவில் 10,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
x
தினத்தந்தி 16 July 2020 10:14 PM IST (Updated: 16 July 2020 10:14 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று 10 ஆயிரத்தினை கடந்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று 722 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 275 ஆக உயர்வடைந்து உள்ளது.  இவற்றில் திருவனந்தபுரத்தில் அதிக அளவாக 339 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

இன்றைய புதிய பாதிப்புகளில் 481 பேருக்கு மற்றவரிடம் இருந்து வைரஸ் பரவியுள்ளது தெரிய வந்துள்ளது.  மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 157 பேர் வெளிநாடுகளை  சேர்ந்தவர்கள்.  62 பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள்.  12 சுகாதார பணியாளர்கள், எல்லை பாதுகாப்பு படையினர் 5 பேர் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் 3 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.  

இதேபோன்று இன்று 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.  இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.  227 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  5,372 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story