மேல்முறையீடு செய்யக்கூடாது என்று குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் மிரட்டல் - இந்தியா குற்றச்சாட்டு


மேல்முறையீடு செய்யக்கூடாது என்று குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் மிரட்டல் - இந்தியா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 July 2020 1:30 AM IST (Updated: 17 July 2020 1:04 AM IST)
t-max-icont-min-icon

மேல்முறையீடு செய்யக்கூடாது என்று குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் மிரட்டல் விடுத்திருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவ், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, அவரை பாகிஸ்தான் கைது செய்தது. அவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இருப்பினும், இந்தியா தொடர்ந்த வழக்கால், மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானை சர்வதேச கோர்ட்டு கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:-

குல்பூஷண் ஜாதவை அதிகாரிகள் சந்தித்து திரும்பிய பிறகு தாக்கல் செய்யும் அறிக்கை அடிப்படையில் இந்தியா தனது கருத்தை தெரிவிக்கும். மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில்லை என்று ஜாதவ் முடிவு செய்ததாக பாகிஸ்தான் கூறுவது கேலிக்கூத்து. தனது உரிமையை விட்டுக்கொடுக்குமாறு அவரை பாகிஸ் தான் மிரட்டி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story