ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: வசுந்தரா ராஜே, முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு உதவ முயற்சிக்கிறார் -பா.ஜனதா கூட்டணி கட்சி
ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியில் வசுந்தரா ராஜே, முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு உதவ முயற்சிக்கிறார் என பா.ஜனதா கூட்டணி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
புதுடெல்லி:
பா.ஜனதாவின் மிக முக்கியமான தலைவரான முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு உதவ முயற்சிக்கிறார் என்று ராஜஸ்தானில் உள்ள பாஜக கூட்டணி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹனுமான் பெனிவால் வெளியிட்ட உள்ள டுவிட் ஒன்றில்
"முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தனக்கு நெருக்கமான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அழைத்து அசோக் கெலாட்டை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். சிகார் மற்றும் நாகூரில் உள்ள ஒவ்வொரு ஜாட் எம்.எல்.ஏ.வையும் அழைத்து சச்சின் பைலட்டிடமிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டார், இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது, என ஹனுமான் பெனிவால் கூறி உள்ளார்.
தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பெனிவால் "வசுந்தரா ராஜே கெலாட்டுக்கு உதவுவதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உதவியாளர்கள் கூறியுள்ளனர், எனவே அசோக் ஜியின் அரசு வீழ்ச்சியடையாது என கூறினார்.
ராஜஸ்தான் பா.ஜனதா தலைவர் சதீஷ் புனியா கூறும் போது பெனிவால் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு உள்ளோம். "எங்கள் தலைவர்கள் அவருடன் பேசினர். வசுந்தரா ராஜே எங்கள் மரியாதைக்குரிய தலைவர்" என்று புனியா கூறினார்.
Related Tags :
Next Story