லடாக் லே பகுதிக்கு சென்றார் ராஜ்நாத் சிங் ; ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.


ANI
x
ANI
தினத்தந்தி 17 July 2020 10:42 AM IST (Updated: 17 July 2020 10:42 AM IST)
t-max-icont-min-icon

லடாக் எல்லையில் பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் சென்றடைந்தார்.

புதுடெல்லி

லடாக் எல்லையில் இந்தியா, சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டு அமைதி திரும்பிய நிலையில் அங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் சென்றார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை தனிவிமானம் மூலம் லடாக்கில் உள்ள லே பகுதிக்கு சென்றார். அவருடன் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் பிபின் ராவத், தரைப்படை தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே ஆகியோரும் சென்றனர்.

லே பகுதிக்கு மேல் இருக்கும் ஸ்டக்னா, லுகுங் பகுதிகளை ராஜ்நாத் சிங்  ஆய்வு செய்கிறார். முதல் நாளான இன்று லடாக் எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சியை பார்வையிட்ட அவர், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். 

கடந்த 3-ம் தேதி பிரதமர் மோடி லடாக் பகுதிக்கு திடீரென பயணம் மேற்கொண்டார். அங்கு வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார்.

ஆனால், ஜூலை 3-ம் தேதி திட்டப்படி ராஜ்நாத் சிங்தான் லடாக் செல்வதாக இருந்தது. ஆனால், அந்த தேதியில் பிரதமர் மோடி சென்றதால், ராஜ்நாத் சிங் தனது பயணத்தை ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story