திருப்பதியில் தரிசனத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை: தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி கோவிலில் தரிசனத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கோவில்களும் திறக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, ஜூன் மாத இடையே பக்தர்கள் தரிசனத்திற்காக திருப்பதி கோவில் மீண்டும் திறக்கப்பட்டது.
இதனிடையே, திருப்பதி கோயிலில் 14 அர்ச்சகர்கள் உட்பட 140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி கோவில் தரிசனத்தை நிறுத்த வேண்டும் என்று தலைமை அர்ச்சகர் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில், திருப்பதியில் தரிசனத்தை நிறுத்தும் திட்டம் இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறும்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் 70 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில், தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர், கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆந்திர பிரதேச காவலர்கள் ஆவார்கள். அதில், ஒரே ஒருவக்கு மட்டுமே தீவிரமான அறிகுறிகள் உள்ளது. கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான எந்த சான்றுகளும் இல்லை.
அதனால், கோவிலை மூடுவதற்கு எந்தவொரு திட்டமுமில்லை. தொடர்ந்து, மூத்த அர்ச்சகர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். அர்ச்சர்களுக்கும், ஊழியர்களுக்கும் தனியாக தங்குமிடம் கோரியுள்ளனர். அவர்களுக்கான தனியான தங்குமிடமும், அவர்களுக்கு உணவு வழங்குவதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story