நாட்டில் கொரோனா பாதிப்புக்கு வென்டிலேட்டரில் இருப்போர் விகிதம் 0.35%; மத்திய சுகாதாரத்துறை
நாட்டில் கொரோனா பாதிப்புக்கு வெண்டிலேட்டரில் இருப்போர் விகிதம் 0.35% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டு உள்ள தகவலில், நாடு முழுவதும் ஐ.சி.யூ.வில் இருப்போர் விகிதம் 1.94% ஆக உள்ளது. பிராணவாயு சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.81% ஆகவும், வெண்டிலேட்டரில் இருப்போர் விகிதம் 0.35% ஆகவும் உள்ளது என தெரிவித்து உள்ளது.
நாட்டில் இன்றுவரை 3,42,756 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்புகளில் குணமடைந்தோர் எண்ணிக்கை 6.35 லட்சம் (63.33%) ஆக உயர்வடைந்து உள்ளது. உலகில் 135 கோடி பேருடன் 2வது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளபோதிலும், 10 லட்சத்திற்கு 727.4 என்ற அளவிலேயே பாதிப்புகள் உள்ளன.
10 லட்சம் பேரில் பாதிப்புகள் பற்றிய கணக்கீட்டு அளவில் சில ஐரோப்பிய நாடுகளை விட, இந்தியா 4 முதல் 8 மடங்கு குறைவான பாதிப்புகளையே கொண்டுள்ளன என அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
எனினும், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 34,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனாவால் மேலும் 687 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 25,602 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story