மேற்குவங்காளத்தில் இன்று மேலும் 1,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை


மேற்குவங்காளத்தில் இன்று மேலும் 1,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 17 July 2020 5:23 PM GMT (Updated: 2020-07-17T22:53:53+05:30)

மேற்குவங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,894 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் கணிசமாகவே அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று மேற்குவங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,894 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,011 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரேநாளில் மாநிலத்தில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,049 ஆக உய்ர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 838 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,253 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 14,079 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story