ஒரே நாடு, ஒரே கல்வி வாரியம் அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஒரே நாடு, ஒரே கல்வி வாரியம் அமைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் பொதுவான பாடத்திட்டங்கள் மற்றும் பொதுவான பாடங்களை கொண்ட சீரான கல்வி முறையை கொண்டுவர வேண்டும், இதற்காக தற்போது உள்ள இந்திய இடைநிலை கல்வி சான்றிதழ் மற்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆகியவற்றை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி பா.ஜனதாவைச் சேர்ந்த வக்கீல் அஸ்வினிகுமார் உபாத்யாய் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், “இந்த கோரிக்கை அரசின் கொள்கை சார்ந்த விஷயம். இதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது” என்று கூறினர். மேலும் ஒரு வாரியத்தை மற்றொரு அமைப்புடன் இணைக்க நீதிமன்றத்தை நீங்கள் எப்படி கேட்க முடியும்? என்று கேள்வி கேட்ட நீதிபதிகள், இது நீதிமன்றத்தின் செயல்பாடுகள் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story