கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் ஆதித்ய தாக்கரே மனு தாக்கல்


கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் ஆதித்ய தாக்கரே மனு தாக்கல்
x
தினத்தந்தி 18 July 2020 8:53 AM GMT (Updated: 18 July 2020 8:53 AM GMT)

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்ற யுஜிசி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆதித்ய தாக்கரே மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு கடைசி செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டிது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானிய குழு (யு.சி.ஜி.) அறிவித்தது. ஆனால் கொரோனா பரவல் நீடிப்பதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து உள்ளன.

இந்த நிலையில், மராட்டிய  மந்திரி ஆதித்யா தக்கரே, யுஜிசியின் வழிகாட்டுதலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்துள்ளார்.  இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்னும் விசாரணைக்கு ஏற்றவில்லை.  முன்னதாக ஆதித்யா தாக்கரேவின் யுவசேனா  இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “ மத்திய அரசு மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை புறக்கணித்து நாடு முழுவதும்  தேர்வுகளை நடத்த திட்டமிடுகிறது. கொரோனா தொற்று ஒரு தேசிய பேரிடர், எனவே பல்கலைக்கழக மானிய குழு தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


Next Story