தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்: மாயாவதி + "||" + Mayawati Shreds Ashok Gehlot, Congress; Demands President's Rule In Rajasthan

ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்: மாயாவதி

ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்: மாயாவதி
ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
லக்னோ,

ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும் துணை முதல் மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையே கருத்து வேறுபாட்டால் அம்மாநில அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவி வரும் தொடர் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி, ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட்  பகுஜன் சமாஜ் கட்சிச் எம்.எல்.ஏக்களை காங்கிரஸில் சேர்த்ததன் மூலம் இரண்டாவது முறையாக எங்களை ஏமாற்றியுள்ளார். சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு காரியத்தைச்  அசோக் கெலாட் செய்தார் என்பதும் தெளிவாகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் அரசியல் உறுதியற்ற தன்மையை கணக்கில் கொண்டு, மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலமாக ஜனநாயகத்தை காக்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்
தொற்று பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களும் தற்காலிகமாக சில இடங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
2. ராஜஸ்தானில் இட ஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் தொடர் போராட்டம்
ராஜஸ்தானில் இட ஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3. ஐபிஎல்; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 191- ரன்கள் குவிப்பு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணையித்துள்ளது.
4. வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 3 மசோதாக்கள் அறிமுகம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, ராஜஸ்தான் அரசு 3 மசோதாக்களை சட்டப்பேரவையில் இன்று அறிமுகம் செய்தது.
5. ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.