தேசிய செய்திகள்

திருவனந்தபுரத்தில் 2 இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது: பினராயி விஜயன் + "||" + Community spread of coronavirus has been confirmed at two places in Thiruvananthapuram.

திருவனந்தபுரத்தில் 2 இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது: பினராயி விஜயன்

திருவனந்தபுரத்தில் 2  இடங்களில்  கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது: பினராயி விஜயன்
திருவனந்தபுரத்தில் 2 இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்வதைக் காண முடிகிறது. குறிப்பாக தலைநகர் திருவனந்தபுரத்தில் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது.

இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், “ கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 593 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது  ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,659 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 6,416 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர்.  திருவனந்தபுரத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் 60 சதவித கொரோனா தொற்று உள்ளூர் பரவல் மூலம் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் 2 இடங்களில் சமூக பரவல் உறுதியாகியுள்ளது.எனவே, கொரோனா தொற்று தொடர்பாக  வெளியிட்டப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. அசாம், ஜார்க்கண்ட் மாநில கொரோனா பாதிப்பு விவரம்
அசாம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 666- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம்: நிபுணர் குழு அறிக்கை
வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்றும், புதிதாக ஊரடங்கு அமல்படுத்த தேவை இல்லை என்றும் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.
4. இமாச்சல பிரதேசத்தில் புதிதாக 170- பேருக்கு கொரோனா
இமாச்சல பிரதேசத்தில் புதிதாக 170- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. 1½ மாதத்துக்கு பின் முதல் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழே சரிவு
இந்தியாவில் 1½ மாதத்துக்கு பின் முதல் முறையாக சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழே குறைந்துள்ளது.