ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுடன் முதல் மந்திரி அசோக் கெலாட் திடீர் சந்திப்பு
ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல் மந்திரி அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.
ஜெய்பூர்,
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் ஆகிய இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சச்சின் பைலட் தனியே முகாமிட்டுள்ளார். சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கவும் அசோக் கெலாட் அரசு முயற்சித்து வருகிறது. இதனால், ராஜஸ்தான் மாநில அரசியலில் உச்ச கட்ட குழப்பம் நிலவுகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், ராஜஸ்தானின் பிராந்திய கட்சியான பாரதிய பழங்குடியினர் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள், அசோக் கெலாட் அரசுக்கு தங்கள் ஆதரவை அளித்தனர். இந்த நிலையில், ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல் மந்திரி அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.

45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனவும் மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது ஆளுநரிடம அசோக் கெலாட் எடுத்துரைத்ததாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story