ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - மாயாவதி
ராஜஸ்தானில் அரசியல் நிலையற்ற சூழல் நிலவுவதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
ஜெய்பூர்,
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் மற்றும் துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட் ஆகிய இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சச்சின் பைலட் தனியே முகாமிட்டுள்ளார். சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கவும் அசோக் கெலாட் அரசு முயற்சித்து வருகிறது. இதனால், ராஜஸ்தான் மாநில அரசியலில் உச்ச கட்ட குழப்பம் நிலவுகிறது.
இந்நிலையில் ராஜஸ்தானில் அரசியல் நிலையற்ற சூழல் நிலவுவதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவில்,
ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெஹ்லோட் தனது எம்.எல்.ஏக்களை காங்கிரஸில் இணைத்தது மூலம் இரண்டாவது முறையாக எங்களை அவர் ஏமாற்றியுள்ளார். சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு காரியத்தைச் செய்தார் என்பதும் தெளிவாகிறது.
மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மையை கணக்கில் கொண்டு, மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தானில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலமாக ஜனநாயகத்தை காக்க முடியும் என அதில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல் மந்திரி அசோக் கெலாட் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story