3.58 லட்சம் பேர்தான் உண்மையிலேயே சிகிச்சையில் உள்ளனர் 24 மணி நேரத்தில் 18 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர் மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 18 ஆயிரம் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 18 ஆயிரம் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். நாட்டில் 3.58 லட்சம் பேர்தான் உண்மையிலேயே கொரோனா சிகிச்சையில் உள்ளனர் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தொற்றும் அதிகரிப்பு குணம் அடைந்தோரும் அதிகரிப்பு....
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதே போன்று கொரோனா சிகிச்சைக்கு பின்னர் அதில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
நேற்றும் ஏறத்தாழ 35 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்தது.
அதே நேரத்தில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை சுமார் 18 ஆயிரம் ஆகும்.
இதனால் இதுவரை கெரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 53 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது
நாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் விகிதம், 63 சதவீதமாக உள்ளது.
சிகிச்சையில் இருப்போர்...
தற்போது நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையிலோ, வீடுகளில் சுய தனிமைப்படுத்தலிலோ இருப்போரின் எண்ணிக்கை 3 லட்சத்து 58 ஆயிரத்து 692 தான் என்று மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நிர்வகிக்கக்கூடிய அளவிலேயே இருக்கிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் உறுதிபட கூறுகிறது.
பரிசோதனைகளும் அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 24 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் சோதிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 34 லட்சத்து 33 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது.
10 லட்சம் பேருக்கு 9734.6 என்ற விகிதத்தில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே தொற்று பரவலை குறைப்பதற்கு உதவும் விதத்தில் மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படுகின்றன.
அந்த வகையில் பீகாருக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தலைமையிலான மத்திய குழு பீகாருக்கு விரைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Tags :
Next Story