பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர் தாக்குதல்; மத்திய வெளிவிவகார அமைச்சகம் கண்டனம்
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தொடர் தாக்குதலுக்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கிருஷ்ண காடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது.
இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட இந்தியர்களில் 3 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் அராஜக போக்கிற்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானிய படைகள் எல்லை பகுதியில் எங்கள் நாட்டு பொதுமக்கள் மீது நடத்தி வரும் இதுபோன்ற அத்துமீறிய தாக்குதல்களை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி, பாகிஸ்தானிய படைகள் இந்த ஆண்டில் முன்னறிவிப்பன்றி நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 இந்தியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 94 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதுவரை 2,711 முறை இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளது என தெரிவித்து உள்ளது. இதேபோன்று பாகிஸ்தான் தூதரகத்திற்கு விளக்கம் கேட்டு சம்மனும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story