கொரோனாவுடன் போராட பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும்"- மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ்


கொரோனாவுடன் போராட பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும்- மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ்
x
தினத்தந்தி 19 July 2020 2:54 PM IST (Updated: 19 July 2020 2:54 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுடன் போராட பசுவின் கோமியத்தை அருந்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் கூறியுள்ளார்.

கொல்கத்தா,

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும் என்று மேற்கு வங்காள பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.  சமூக வலைத்தளங்களில் திலிப் கோஷ் இவ்வாறு பேசும் காட்சிகள் அடங்கிய தொகுப்பு வேகமாக பரவி வருகிறது.  

திலிப் கோஷ் இது குறித்து கூறியிருப்பதாவது:- நான் பசுவை பற்றி பேசினால் பலருக்கு பிடிக்காது. பசுவின் மதிப்பை கழுதைகள் ஒருபோதும் உணராது. இந்தியர்கள் பசுக்களை வணங்குகிறோம்.  உடல் ஆரோக்கியமாக இருக்க  நாம் கோமியத்தை அருந்த வேண்டும். பசுவின் மதிப்பு மது அருந்துவோருக்கு எப்படி புரியும்” என்று கூறுகிறார்.

மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ், இதுபோல பேசுவது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2019 நவம்பரில்  பசுவின் பாலில் தங்கம் உள்ளது என்று கூறியிருந்தார். கோஷின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.


Next Story