ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்ற 7 பேர் கைது


ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்ற 7 பேர் கைது
x
தினத்தந்தி 19 July 2020 10:40 PM IST (Updated: 19 July 2020 10:40 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் தொற்று காட்டுத்தீயாக பரவி வருகிறது. மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிற போதும் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவத்தொடங்கி 7 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் சிகிச்சைக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதே நேரத்தில் பிற நோய்களுக்கு தரப்படுகிற சில மருந்துகளை சோதனை ரீதியில் கொரோனா நோயாளிகளுக்கு உலகமெங்கும் தருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று நோய்க்கு எதிரான சிகிச்சையில் முக்கிய பங்கு வகித்து வரும் 'ரெம்டெசிவிர்' ஊசி மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்தனா்.

அந்த ஊசி மருந்தின் அதிகபட்ச விலை ரூ.5,400-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபா்கள் அந்த மருந்தை ரூ.30,000க்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மும்பை நகரில் இரு இடங்களில் திடீா் சோதனை நடத்திய உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் ரெம்டெசிவிர் மருந்துகளை மீட்டனா்.

குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் மீதும் மோசடி (420) மற்றும் எஃப்டிஏ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனா். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story