புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
அதையடுத்து பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு கூறிய முதலமைச்சர்,
புதுச்சேரி உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கருணாநிதி பெயரில் சிற்றுண்டி திட்டம் நவம்பர் 15-ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்றும் காலை உணவாக இட்லி, கிச்சடி, பொங்கல் போன்றவை வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கப்படும் எனவும் அம்மாநில் முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story