பிரதமர் போலி வலிமை வாய்ந்த உருவம் என தன்னை காட்டி ஆட்சிக்கு வாந்தார் அது இந்தியாவின் மிகப்பெரிய பலவீனமாகிவிட்டது -ராகுல்காந்தி
பிரதமர் மோடியில் போலி வலிமைவாய்ந்த உருவம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய பலவீனமாகிவிட்டது என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி:
பிரதமரின் "போலி வலிமை வாய்ந்த உருவம்; என்பது இந்தியாவின் மிகப்பெரிய பலவீனமாகிவிட்டது என்று குற்றம் சாட்டிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நரேந்திர மோடிக்கு எதிராக புதிய நேரடி தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கினார்.
ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, இந்தியா-சீனா எல்லை தகராறு தொடர்பாக பிரதமரை தாக்கி உள்ளார்.
"பிரதமர் ஆட்சிக்கு வருவதற்காக ஒரு போலி வலிமை வாய்ந்த உருவமாக தன்னை உருவாக்கினார். அது அவருடைய மிகப்பெரிய பலமாக இருந்தது. அது இப்போது இந்தியாவின் மிகப்பெரிய பலவீனமாகி என்று காங்கிரஸ் தலைவர் டுவீட் செய்துள்ளார்.
நடப்பு விவகாரங்கள் மற்றும் வரலாறு குறித்த தனது தொடரின் ஒரு பகுதியான வீடியோவில் ராகுல்காந்தி இந்த குற்றம் சாட்டியுள்ளார், லடாக்கில் சீனா ராணுவம் இந்தியப் பகுதியை ஆக்கிரமித்துள்ளன. இன்று சீனர்கள் உலகை வடிவமைக்க முயற்சிக்கிறார்கள் என்று சீனாவின் மூலோபாய மற்றும் தந்திரோபாய விளையாட்டுத் திட்டத்தைப் பற்றி பேசும்போது
"இது வெறுமனே ஒரு எல்லை பிரச்சினை அல்ல. எனக்கு இருக்கும் கவலை என்னவென்றால் (சீனர்கள்) இன்று நமது பகுதியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் மனதில், அவர்கள் உலகத்தை வரைபடமாக்கியுள்ளனர்.
மேலும் அவர்கள் உலகை வடிவமைக்க முயற்சிக்கிறார்கள். அதுதான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கான அளவு.. எனவே நீங்கள் சீனர்களைப் பற்றி சிந்திக்கும்போது, அவர்கள் நினைக்கும் நிலை அதுதான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், ”என்று அவர் கூறி உள்ளார்.
PM fabricated a fake strongman image to come to power. It was his biggest strength.
— Rahul Gandhi (@RahulGandhi) July 20, 2020
It is now India’s biggest weakness. pic.twitter.com/ifAplkFpVv
Related Tags :
Next Story