மேற்கு வங்க மாநிலத்தில் வாரத்திற்கு இரண்டு நாள் முழு ஊரடங்கு - மாநில அரசு அறிவிப்பு


மேற்கு வங்க மாநிலத்தில் வாரத்திற்கு இரண்டு நாள் முழு ஊரடங்கு - மாநில அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 20 July 2020 7:00 PM IST (Updated: 20 July 2020 7:00 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்க மாநிலத்தில் வாரத்திற்கு இரண்டு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள இடங்களில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதனையடுத்து மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி, மேற்கு வங்க மாநிலத்தில் வாரத்திற்கு இரண்டு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

அதன்படி, வாரத்தில் இரு நாள்கள் அனைத்து அலுவலகங்களும் மூடப்படும் என்றும் போக்குவரத்து சேவைகளும் முடக்கப்படும் என்றும் கூறினார். இந்த வாரம், முழு ஊரடங்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைமுறையில் இருக்கும். அடுத்த வாரம், புதன்கிழமை (ஜூலை 29) பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் இதுகுறித்து வரும் திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் கூறினார். 

Next Story