நேர்முகத்தேர்வுக்கு வரும் சிவில் சர்வீசஸ் தேர்வர்களுக்கு விமான கட்டணம் திரும்ப வழங்கப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு


நேர்முகத்தேர்வுக்கு வரும் சிவில் சர்வீசஸ் தேர்வர்களுக்கு விமான கட்டணம் திரும்ப வழங்கப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 July 2020 12:17 AM IST (Updated: 21 July 2020 12:17 AM IST)
t-max-icont-min-icon

நேர்முகத்தேர்வுக்கு வரும் சிவில் சர்வீசஸ் தேர்வர்களுக்கு விமான கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கு தேர்ந்தெடுக்க கடந்த ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வையடுத்து, 2 ஆயித்து 304 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் நேர்முகத்தேர்வு நடந்தபோது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 623 பேருக்கு நடத்த முடியவில்லை. அவர்களுக்கு வருகிற 20-ந் தேதி முதல் 30-ந் தேதிவரை டெல்லியில் நேர்முகத்தேர்வு நடக்கிறது.

இந்நிலையில், மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தற்போது, ரெயில் சேவை முழுமையாக இயங்காததால், தேர்வர்கள் டெல்லிக்கு விமானத்தில் வந்து செல்வதற்கான கட்டணம் திரும்ப வழங்கப்படும். அவர்கள் டெல்லியில் தங்குவதற்கும், போக்குவரத்துக்கும் ஆணையம் உதவும்.

நேர்முகத்தேர்வு கடிதம் வைத்துள்ள தேர்வர்களை நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வின்போது, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story