திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் இன்று முதல் நிறுத்தம்..


திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் இன்று முதல் நிறுத்தம்..
x
தினத்தந்தி 21 July 2020 2:07 AM GMT (Updated: 21 July 2020 2:07 AM GMT)

திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் இன்று முதல் நிறுத்தப்படுகிறது.

திருப்பதி


திருப்பதி, திருமலையில் வேகமாக கொரோனா பரவல் காரணமாக ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கவுண்டர்களில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் இன்றுமுதல் நிறுத்தப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர், அர்ச்சகர்கள்,ஊழியர்கள், போலீசார் ஆகியோர் உட்பட 150 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஐம்பது வார்டுகள் உள்ள திருப்பதியில் 48 வார்டுகள் கொரோனா தொற்று காரணமாக தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே திருப்பதி மலையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சாமி தரிசன அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை திருப்பதி, திருமலையில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தரிசன டோக்கன்கள் இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


Next Story