மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன் காலமானார்


மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன் காலமானார்
x
தினத்தந்தி 21 July 2020 8:09 AM IST (Updated: 21 July 2020 8:09 AM IST)
t-max-icont-min-icon

மத்தியப் பிரதேச கவர்னர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

போபால்

மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன் (வயது 85)  உடல நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார்.  இதனை அவரது மகன் அசுதோஷ் தெரிவித்து உள்ளார்.

தாண்டன் ஜூன் 11 அன்று சுவாசப்பிரச்சினை காரணமாகலக்னோவில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் காய்ச்சலும் இருந்தது.

தாண்டன் உத்தரபிரதேசத்தில் கல்யாண் சிங் அரசில் அமைச்சராகா இருந்து உள்ளார். பின்னர் பாஜக-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியின் மாயாவதி ஆட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் இருந்து உள்ளார்.

Next Story