கொரோனா பரவல் அபாயத்தால் அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு


கொரோனா பரவல் அபாயத்தால் அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 21 July 2020 8:57 PM IST (Updated: 21 July 2020 8:57 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் வருடம் தோறும் நடைபெறும் அமர்நாத் புனித யாத்திரை இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுவதாக அமர்நாத் கோவில் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்படுவது குறித்து மத்திய அரசு அறிவித்தால், அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது முறையாக இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அமர்நாத் கோவில் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தற்போதைய சூழலைப் பார்க்கும்போது இந்த ஆண்டு அமர்நாத் புனித யாத்திரையை நடத்துவது நல்லதல்ல என்று அமர்நாத் கோவில் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்தாண்டுக்கான புனித யாத்திரையை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பதற்கு கோவில் வாரியம் வருத்தம் தெரிவிக்கிறது.

மத உணர்வுகளை உயிர்ப்புடன் வைக்க காலை மற்றும் மாலை பூஜைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கடந்த கால நடைமுறைப்படி, பாரம்பரிய சடங்குகள் பின்பற்றப்படும்”  என்று தெரிக்கப்பட்டுள்ளது.

Next Story