தந்தைக்கு உதவியாக விவசாய பணிகளை பார்க்கும் 6 வயது சிறுமி
கர்நாடகாவில் தந்தைக்கு உதவியாக 6 வயது சிறுமி விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறாள்.
கோலார் தங்கவயல்,
கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால் ஏராளமானோர் வேலை இழந்து பரிதவித்து வருகிறார்கள். பள்ளி-கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளதால், மாணவ-மாணவிகள் விளையாடி பொழுதை கழித்து வருகிறார்கள். இந்த நிலையில், பள்ளி திறக்கப்படாததால், தந்தைக்கு உதவியாக 6 வயது சிறுமி விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறாள்.
அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா சில்லாரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவள் கிருத்திகா (வயது 6). இவள் அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளி மூடப்பட்டுள்ளது. இதனால் அவள், தனது தந்தைக்கு உதவியாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறாள். தினமும் தனது தந்தையுடன் விவசாய நிலத்துக்கு செல்லும் கிருத்திகா, அங்கிருக்கும் சின்ன, சின்ன வேலைகளை செய்கிறாள். மேலும், ஒரு சைக்கிள் டயரில் ஏர் உழும் கருவியை அவளுடைய தந்தை செய்து கொடுத்துள்ளார்.
அதனை வைத்து, விவசாய நிலத்தில் கிருத்திகா உழுது வருகிறாள். இதுகுறித்து அவளுடைய தந்தை கூறுகையில், பள்ளி திறக்கும் வரை எனக்கு உதவியாக விவசாய பணிகளில் ஈடுபட இருப்பதாக எனது மகள் கூறியுள்ளாள் என்றார். சைக்கிள் டயரில் செய்யப்பட்ட ஏர் கலப்பை கொண்டு விவசாய நிலத்தில் கிருத்திகா உழும் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Tags :
Next Story