ராஜஸ்தானில் கொரோனா காலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நட்சத்திர ஓட்டலில் குதுகலம் மத்திய மந்திரி கண்டனம்
ராஜஸ்தானில், முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
புதுடெல்லி,
ராஜஸ்தானில், முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதல்மந்திரியாக இருந்த சச்சின் பைலட், தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேருடன் சேர்ந்து, கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இதனால் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான அரசு எந்த நேரத்திலும் கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குதிரை பேரம் மற்றும் கட்சி தாவல் நடவடிக்கைகளை தவிர்க்க அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள் விளையாடுவது, பாடல் பாடுவது, ஒன்றாக அமர்ந்து உணவு உண்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மக்கள் கொரோனா வைரசால் அவதிப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் ஆடம்பரங்களை மகிழ்வித்து வருவது கண்டனத்துக்குரியது என மத்திய ஜல சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதற்கான நேரம் இது, நீங்கள் பாடல்களைப் பாடுகிறீர்கள். ஏழைகளுக்கு உணவு வினியோகிக்க இதுவும் நேரம், நீங்கள் இத்தாலிய சமையல் கற்கிறீர்கள். ராஜஸ்தான் மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைத்தையும் அறிவார்கள்” என தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story